நண்பர்களே,நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு சில விஷயத்தை கவனம் செலுத்தினால் போதும்..
சுற்றி இருப்பவர்களால் நாம் பல நேரங்களில் மனதளவில் கஷ்டப்படும் போதெல்லாம் நமக்கு நாமே உத்வேகம் கொடுத்துக் கொண்டிருந்தால் மட்டும் தான் நம்முடைய வெற்றி நம்மை சேரும்.
அடுத்தடுத்து தோல்விகள் வந்தாலும் துவண்டு போகாமல் என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைப்பு மட்டும் மனதை விட்டு நீங்காமல் தொடர்ச்சியாக முயற்சி வேண்டும் நண்பா.
நமக்கு நாமே உத்வேகம் பொதுவாக வாழ்க்கையில் எல்லோருக்கும் தோல்வியே வேண்டாம் வெற்றி மட்டும் வேண்டும் என்ற நினைப்புதான் அனைவருக்கும் இருக்கும். ஆனால சில நேரங்களில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளாலும் நமக்கு தோல்விகள் வந்து அனுபவமாக மாறக்கூடும். பல நேரங்களில் கூட இருப்பவர்களே நமக்கு செய்யும் துரோகங்கள் கூட நமக்கு தோல்வியை ஏற்படுத்திவிடும். ஆனால் அந்த நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று நடந்து முடிந்த விஷயத்தை எண்ணி எண்ணி வருத்தத்தில் இருக்கும்போது நாம் கஷ்டத்தில் மட்டும் தான் இருக்க முடியுமே தவிர வெற்றியை ருசி பார்க்க முடியாது. அந்த நேரத்தில் நமக்கு நாமே மோட்டிவேஷன் கொடுத்துக் கொண்டிருந்தால் மட்டும் தான் அடுத்த என்ன செய்ய முடியும் என்பதை யோசிக்கவே முடியும்.
அடுத்து என்ன செய்வது தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடுங்கள். இல்லை என்றால் இந்த உலகம் உங்களை புதைத்து விடும். வெற்றி பெற்றவர்களை மட்டும் தான் இந்த உலகமே கொண்டாடும். நாம் தோல்வி பெற்று விட்டால் இது எனக்கு ஏற்கனவே தெரியும் இவருக்கு இப்படித்தான் ஆகும் என்று, ஒரே வார்த்தையில் இந்த உலகம் நம் முயற்சிகளையும், கஷ்டங்களையும் புதைத்து விடுவார்கள். ஆனால் பட்ட தோல்விகள் இருந்து விரைவாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு சிந்தனை தான் நமக்கு இருக்க வேண்டும். ஐயோ இப்படி ஆகிவிட்டதே! என்று யோசித்துக் கொண்டே இருக்கக் கூடாது. முயற்சி செய்ய தயங்காமல் நாம் எடுத்து வைக்கும் அடி தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். தூக்கி வீச வேண்டும் மாற்றங்கள் ஒன்றே இந்த உலகில் இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி. வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகி விட்டால் யாருடைய மாறுதலும் நம்மை பலம் இழக்க செய்யாது. கூட இருந்தவர்கள் நமக்கு குழிப்பறித்தாலும் அவர்களுடைய சுயரூபம் தெரிந்து விட்டது என்று தூக்கி எறிந்து விட வேண்டுமே தவிர ஏன் இப்படி செய்தார்கள் எதற்காக இப்படி செய்தீர்கள் என்று அவர்களிடம் சென்று வீணாக விவாதம் செய்து கொண்டிருப்பதால் ஒன்று நடந்து விடாது நண்பா. நான் உனக்கு கொடுத்த பாசத்தையும், நம்பிக்கையையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். ஆனால் உங்கள் முன்பு என்னால், என்னுடைய திறமையால் வெற்றி காண முடியும் என்று உறுதியாக நீங்கள் உங்களை ஏமாற்றியவர்கள் முன்பு ஜெயித்துக் காட்ட வேண்டும்.
புதியதை கற்றிடு நண்பா நீ என்ன செய்தாலும் அதற்கு குற்றம் சொல்ல நாலு பேர் இருப்பார்கள். ஆனால் அந்த நாலு பேர்கள் உங்களுடைய குற்றத்தை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர, நீங்கள் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் அதைக் குறித்து பேச முடியாது. உங்கள் வெற்றியால் மட்டும்தான் அவர்களுடைய வாயை அடைக்க முடியும். உண்மையான வாழ்க்கை என்றால் அடுத்தடுத்து முயற்சியும், புதிய அனுபவங்களும் கிடைத்துக் கொண்டு இருக்க வேண்டும். இருக்கும் சூழ்நிலையில் புதியதை கற்று வெற்றியை, மகிழ்ச்சியோடு இந்த திங்கள்கிழமைகளில் இருந்து கொண்டாடுங்கள் நண்பர்களே.
Write a comment ...