ஏமாற்றத்தால் விரக்தியில் இருக்கீங்களா? அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..இதை கவனிங்க
12 Aug, 2024
எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கிறீர்களா நண்பர்களே..!
தோல்வியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் உங்களுக்கு விரக்தி வரும் அதை விரட்டுவதற்கான வழிகளை தான் இங்கே பார்ப்போம்..
பொதுவாக எல்லோருக்குமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில தோல்விகளை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் அதையெல்லாம் நினைத்து துவண்டு போக இடம் கொடுக்கக் கூடாது. அடுத்த வெற்றி தான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் எப்போதுமே ஒருவரால் வெற்றியை மட்டுமே பெற முடியாது தானே.
நாம் பார்க்கும் வெற்றி பெற்ற நபர்கள் தங்களுடைய ஆரம்பகாலத்தில் எவ்வளவோ சோதனைகளையும் துயரங்களையும் கடந்து தான் வந்திருப்பார்கள். யாரும் எளிமையாக இன்று வந்திருக்கும் நல்ல நிலைமைக்கு வர முடியாது. அந்த மாதிரி நீங்களும் விரைவில் வரவேண்டும் என்றால் இந்த சின்ன சின்ன தோல்விகள் சந்தித்துதான் ஆக வேண்டும். இதில் இருக்கும் கஷ்டங்களை நாம் அனுபவிக்கும் போது தான் இனி பெரிய மகிழ்ச்சியை நம்முடைய வாழ்க்கையில் முழுமையாக அனுபவிக்க முடியும்.
இப்போது பிளஸ் 2 தேர்வு முடிவு வந்திருக்கிறது. பலர் நீட் எக்ஸாம் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு வர இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் பலர் கவர்மெண்ட் வேலைகளுக்காக வருடக் கணக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் எதிர்பார்த்த மார்க்குகள் சில நேரங்களில் தவறிப் போய் இருக்கலாம் ஆனால் அது சரி செய்யக்கூடியது தான்.
இவ்வளவு நாட்கள் நாம் பட்ட கஷ்டம் எல்லாம் இந்த நொடி பொழுதில் போய்விட்டதே என்று வருத்தப்படுவதால் ஒன்றும் ஆகி விடப் போகாது. இன்னும் அதில் நாம் நிறைய கத்துக்க இருக்கு என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். பலர் நினைக்கலாம் இதற்கே இத்தனை வருடங்கள் போகிவிட்டதே இன்னும் வருடக்கணக்காக நாம் அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்க முடியுமா? என்று உங்களுடைய தன்னம்பிக்கையை விட்டு விடாதீர்கள். சிலர் எதையுமே அனுபவிக்காமல் கஷ்டப்படாமல் சில வெற்றிகளை அடைந்து விடுவார்கள். ஆனால் அவர்களை நம்மோடு ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு நிம்மதி மட்டுமல்ல நம்முடைய தன்னம்பிக்கையும் குறைந்து போய்விடும். நீங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. உங்களால் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம். உங்களுடைய உழைப்பை மட்டும் நம்புங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சிலர் அதிர்ஷ்டத்தால் வெற்றி கிடைத்துவிட்டு ஆடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நீங்கள் நொடி பொழுதில் உங்கள் பல வருட இழப்புகளையும் இழந்து இருப்பீர்கள். ஆனால் அதை நினைத்து நீங்கள் சந்தோசமாக கர்வம் தான் பட வேண்டும். வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. உழைத்தவனுக்கு தான் உழைப்பின் ருசி தெரியும். ஏதோ அதிர்ஷ்டத்தால் வந்தவர்களால் அந்த மகிழ்ச்சியை ரொம்ப நாட்கள் அனுபவிக்க முடியாது. ஆனால் உங்களைப் போல கஷ்டப்பட்டு அந்த மகிழ்ச்சியை விரைவில் நீங்கள் பெற்ற பிறகு கிடைக்கும் ருசி வேற லெவலில் இருக்கும்.
ஒவ்வொரு முறையும் தேர்வு முடிவுகள் வரும் போதும் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் பலர் தற்கொலை முயற்சிகளை எடுக்கிறார்கள். இது அபத்தம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அந்த நேரத்தில் இவ்வளவு ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் தான். ஆனால் அந்த சில நாட்களை தாண்டி விட்டால் நீங்கள் அனுபவசாலியாகவும் இதைவிட சிறந்த வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். எப்போதுமே ஒன்று மட்டும்தான் வழி என்று இல்லை. அதற்கு மாற்று வழியும் இருக்கும் அதை நாம் முயற்சி செய்வோம். நான் தோல்வியடைந்து விட்டால் நம்முடைய உறவினர்களோ நண்பர்களோ என்ன சொல்வார்கள் என்ற நினைப்பை தூக்கி தூர எறிந்து விடுங்கள். யார் என்ன சொன்னாலும் உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள் இதைவிட சிறப்பாக என்னால் செய்ய முடியும் என்று நம்பி களத்தில் இறங்குகள் இந்த வாய்ப்பு இல்லை என்றால் இன்னொரு வாய்ப்பு ஆனால் அந்த வாய்ப்பு உங்களுக்கு பிரகாசமாக தான் இருக்கும். இன்று நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்களோ அவர்கள் நீங்கள் தப்பான முடிவை எடுத்து விட்டால் ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்று ஒருநாள் கூறுவார்கள். ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை இழந்து போய் விடுவீர்கள். உங்களை நம்பிக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களும் தாங்கிக் கொள்ளாது. அதனால் எந்த தவறான முடிவுகளையும் மனதிற்குள் முளைக்க விடாதீர்கள். "இது போனால் இன்னொன்று" என்பதை மட்டும் மனதில் வைத்து அதற்கான சந்தோஷமாக நடை போடுவோம் நண்பர்களே..
Writing is my passion. I would like to share my knowledge with the world. I am looking forward to financial support for my Postings and Articles. I would audience to contribute gracefully. No one has contributed financially to me so far.
support gracefully and help me focus on making more postings.
Write a comment ...