வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரு ஆசை மட்டும் இருந்தால் போதாது அதற்கான முயற்சியும் வேண்டும்.
தேங்கி கிடக்கும் நீரை போல நம்முடைய வாழ்க்கை இருந்தால் அங்கே பாசி பிடித்து விடும் நண்பர்களே.
ஓடிக்கொண்டிருக்கும் நீரில் தான் எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து எறிய முடியும். அதற்காக சில யோசனைகளை உங்களோடு பகிர்கிறேன்.
வெற்றி பெற வேண்டும் என்றும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்... ஆனால் ஒரு சிலர் அதற்கான முயற்சியை எடுப்பதில் தான் சோம்பேறித்தனமாக அமர்ந்திருக்கிறோம். எதை செய்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நாம் இன்றை இழந்து கொண்டிருப்பதால் தான் பல தோல்விகள் நம்மை விட்டுப் போவதற்கு அடம்பிடிக்கிறது. நமக்குள் எல்லா சக்தியும் இருக்கிறது. எதுவும் செய்ய முடியாதவர்கள் என்று யாருமே கிடையாது. நாம்தான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் யோசித்துக் கொண்டே இருக்கிறோம். நம்மைப் போல இருக்கும் இன்னொருவர் நாம் யோசித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அங்கே சாதித்து விடுகிறார். அவர்களும் நம்மை போல மனிதர்கள் தானே! அவர்களால் செய்ய முடிவது ஏன் நம்மால் செய்ய முடிவது இல்லை இதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.
எப்போதுமே நாம் அப்டேட் ஆக இருக்க வேண்டும் புதுமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் புதுமைகள் தான் நம்முடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எந்த இடத்திலும் பல விஷயங்கள் தெரிந்தவர்கள் தான் அங்கு தலை நிமிர்ந்து நிற்க முடியும். படித்து பட்டம் பெற்று இருந்தாலும் தற்போது சூழ்நிலையில் இருக்கும் அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள், செயல்பாடுகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. அதை நாம் கற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டவே கூடாது. தேவையில்லாமல் நம்முடைய பொன்னான நேரத்தை தூங்கிக் கழிப்பதிலும், சோம்பேறித்தனமாக இருக்கும் போது சில தேவையற்ற பொழுது போக்கிலும் நம்முடைய நேரத்தை செலவழித்து விட்டு, தேவையான விஷயத்தை எனக்கு தெரியாது என்று தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை எல்லாம் கூறிக் கொண்டிருக்கிறோம். அதை மாற்றிக் கொள்வதற்கு தான் உங்கள் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.
நம்முடைய பழக்கவழக்கங்கள் வாழ்க்கையில் சாதித்தவர்களோடு இருக்க வேண்டும். நல்ல புத்தகங்களையும் சாதித்தவர்களின் ஆரம்ப கால கஷ்டங்களையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களெல்லாம் எத்தனை துயரங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதை நம் மனம் ஏற்றுக் கொண்டால்தான் நமக்கு வரும் துயரங்கள் எல்லாம் சிறு துரும்பு என்று நமக்குத் தெரியும். நான் இன்று கஷ்டப்பட்டு முன்னேறி விட்டால் நாளை பல பேருக்கு முன்னோடி அதுவே இன்று கஷ்டப்படுவதற்கு சோம்பேறித்தனம் பட்டு அமர்ந்து விட்டால் பல பேர் அப்போதும் நம்மை சுட்டிக்காட்டி கூறுவார்கள். இவரை போல இருக்கக் கூடாது என்று அதுதானே தற்போது எங்கேயும் நடந்து கொண்டிருப்பது. இதை மாற்றுவதற்காக நம்முடைய மனதை மாற்றிக் கொண்டு வெற்றி மட்டும் தான் நம்முடைய கண்களுக்கு தெரிய வேண்டும் என்பதை மனதிற்குள் பதிந்து வைக்க வேண்டும்.
Write a comment ...